நான் கொரோனாவை விட 'பயங்கரமானவன்': கருணா - sonakar.com

Post Top Ad

Friday, 19 June 2020

நான் கொரோனாவை விட 'பயங்கரமானவன்': கருணா


தான் கொரோனாவை விட அதி பயங்கரமானவன் என தெரிவிக்கிறார் முன்னாள் விடுதலைப் புலிகளின் இராணுவ தளபதிகளுள் ஒருவரான கருணா அம்மான்.

ஒரே நாளில் ஆணையிறவு முகாமில் இருந்த 3000 இராணுவத்தினரைத் தான் கொன்று குவித்தவன் எனவும்  கொரோனாவால் இறந்தவர்களை விட இது அதிகம் என்பதால் தான் அதைவிடப் பயங்கரமானவன் எனவும் கருணா மேலும் விபரித்துள்ளார்.

எனினும், சிங்கள தேசிய எழுச்சியெனும் கோசத்தில் இயங்கி வரும் பொதுஜன பெரமுன கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை அரவணைத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment