ஓட்டமாவடி: வாகன விபத்தில் கல் வியாபாரி மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday, 14 June 2020

ஓட்டமாவடி: வாகன விபத்தில் கல் வியாபாரி மரணம்


மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின்மீயான்குளம் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். 

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து தொழில்நிமித்தம் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில்; பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஓட்டமாவடியில்இருந்து தம்புள்ளை நோக்கி பயணம் செய்த சிறியரக வட்டா வாகனம் பின்னால் வந்து மோதியதில்இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனைபொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் ஓட்டமாவடி 1 ஹுதாப்பள்ளிவீதியை சேர்ந்த கல் வியாபாரி வரிசை முஹம்மது கலீல் றகுமான் (வயது 48) என்பவர் வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

குறித்த விபத்து தொடர்பில்ஓட்டமாவடியைச் சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக பொலிஸார்மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிதனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். 

மரணமடைந்தவரின் குறித்த நபரின் சடலம்மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடுகுறித்த சம்பவத்தினை கேள்வியுற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார். 

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment