சிறுபான்மை சமூகத்தை சீண்டும் கம்மன்பில! - sonakar.com

Post Top Ad

Saturday 6 June 2020

சிறுபான்மை சமூகத்தை சீண்டும் கம்மன்பில!


அமெரிக்காவில் கருப்பின மக்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இறுதியாக உயிரிழந்த ப்ளொயிட் ஜோர்ஜ் இறக்க முன்னர் அடிக்கடி கூறிய 'என்னால் சுவாசிச்க முடியவில்லை' (I can't breathe) என்ற வசனம் உலக அளவில் உணர்வு பூர்வமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்தன் தொடர்ச்சியில், இலங்கையில் சில சிறுபான்மையினர் மூச்சு விடுவது மாத்திரமன்றி பெரும்பான்மையை குண்டு வைத்து தகர்க்கவும் முயற்சிக்கிறார்கள் என தெரிவித்து, அதற்கு உதாரணமாக ஈஸ்டர் தாக்குதல், தலதா மாளிகை மீதான தாக்குதல், கோனவல மற்றும் அரந்தலாவ (புலிகள் தாக்குதல்) போன்றவற்றை முன் வைத்துள்ளார்.

சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வேண்டுமென்றே இவ்வாறு பதிவிட்டுள்ள கம்மன்பிலவுக்கு, சிறுபான்மை சமூகம் என்று குறிப்பிடுவதை தவிர்த்து, சிறுபான்மை சமூகங்களுக்குள் இருந்த தீவிரவாதிகள் என எழுதுவதே தகும் என அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment