2011ம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ண இறுதியாட்டம் பணத்தைப் பெற்றுக் கொண்டு 'விற்பனை' செய்யப்பட்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான கூற்றுக்களைத் தெரிவிக்கும் அவர் அதற்கான ஆதாரங்களை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவுக்குத் தர முடியுமா? என சங்கக்கார கேள்வியெழுப்பியுள்ள அதேவேளை தேர்தல் வந்து விட்டதால் நாடகம் அரங்கேறுகிறது. பெயர்கள், ஆதாரம் எங்கே? என மஹேல ஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த மஹிந்தானந்த, குறித்த சம்பவம் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போதே நடந்ததாகவும் தான் விவாதிக்கத் தயார் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment