நல்லாட்சியினர் வழங்கிய 'கடன்களை' ஆராய ஆணைக்குழு: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 27 June 2020

நல்லாட்சியினர் வழங்கிய 'கடன்களை' ஆராய ஆணைக்குழு: மஹிந்த


ரணில் - மைத்ரி கூட்டரசில் அவசர அவசரமாக அரச வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை அமைக்கப் போவதாக தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

மக்கள் வங்கி ஊழியர்களின் வேண்டுகோளுக்கமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் போட்டியிடும் தரப்புகள் எதிர்த்தரப்பு ஆட்சிக் காலத்தைப் பற்றி விமர்சித்து வருகின்றமையும் கருணா அம்மானை உத்தமராக்கும் பணியில் அத தெரண போன்ற ஊடகங்கள் மும்முரமாக இயங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment