கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஊழியர் சம்பளக் கொடுப்பனவுக்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வைத்தியர் போன்று வேடமிட்டு உள்நுழைந்த நபர் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவத்தை நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மருதானை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment