மேலும் சில கைதுகளுடன் ஈஸ்டர் விசாரணை விரைவில் முடிவு! - sonakar.com

Post Top Ad

Thursday, 18 June 2020

மேலும் சில கைதுகளுடன் ஈஸ்டர் விசாரணை விரைவில் முடிவு!


கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவுக் கட்டத்தை நெருங்கி வந்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.

இதுவரை 237 பேர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

சஹ்ரான் குழுவினர் இயங்குவதற்கு வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை மற்றும் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதி வந்து சேர்ந்துள்ளமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment