நாளை பள்ளிவாயல்கள் திறப்பு: கூட்டுத் தொழுகை இல்லை! - sonakar.com

Post Top Ad

Thursday 11 June 2020

நாளை பள்ளிவாயல்கள் திறப்பு: கூட்டுத் தொழுகை இல்லை!


சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கமைவாக, முறையாக அனுமதி பெற்று நாளைய தினம் பள்ளிவாயல்களைத் திறந்து தனி நபர் வழிபாடுகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 50 பேர் தமது தனி நபர் வழி பாடுகளில் ஈடுபட முடியுமாயினும் கூட்டுத் தொழுகை, கூட்டு அமல்களுக்கு அனுமதியில்லையென முஸ்லிம் விவகார திணைக்களம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் ஜும்மா தொழுகையை நடாத்த முடியாது என்பதோடு 50 பேருக்கு சமூக இடைவெளியைப் பேணி தனி நபர் வழிபாட்டில் ஈடுபடும் அளவுக்கு இடமில்லையாயின் அப்பிரதேசங்களில் மேலும் சில நாட்கள் பொறுமை காப்பதே சிறந்ததெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment