சுயதொழில் முயற்சியாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
கொரோனா சூழ்நிலையில் மாதாந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு 'சலுகை' வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததை நம்பியே சுனில் நியாயம் கேட்கச் சென்றிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள ஹரின், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி வெறும் அறிக்கை வெளியிடாமல் பொறுப்பான பதிலைத் தர வேண்டும் என தெரிவிக்கிறார்.
53 வயதான சுனில், நுகேகொட நிதி நிறுவனம் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment