அமெரிக்காவில் தொடர்ந்தும் மக்கள் போராட்டம் - வன்முறை! - sonakar.com

Post Top Ad

Monday 1 June 2020

அமெரிக்காவில் தொடர்ந்தும் மக்கள் போராட்டம் - வன்முறை!


கருப்பின மக்களின் உயிர்களை துச்சமாக மதித்துச் செயற்படும் அமெரிக்க பொலிசாரைக் கண்டித்து ஆறாவது நாளாகவும் அங்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்துள்ளன.

பல இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் பல இடங்களில் வன்முறைகள் தொடர்கின்றன.

ஜோர்ஜ் ப்ளொய்ட் எனும் நபரை மூச்சுத் திணறி இறக்கும் வரை கழுத்தில் காலால் அழுத்திய பொலிசாரின் நடவடிக்கையினால் வீறு கொண்டு எழுந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமையும் பொலிஸ் நிலையங்கள், அரச உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment