இராணுவத்தை அவமதிக்கவில்லை: கருணா வாக்குமூலம்! - sonakar.com

Post Top Ad

Thursday 25 June 2020

இராணுவத்தை அவமதிக்கவில்லை: கருணா வாக்குமூலம்!


இலங்கை இராணுவத்தினரை அவமதிக்கும் நோக்கில் தான் கருத்து வெளியிடவில்லையென வாக்குமூலம் கொடுத்துள்ளார் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவ தளபதி கருணா அம்மான்.

தீவிர இனவாத அரசியல் பேசி வரும் அவர், அண்மையில் ஒரே இரவில் தாம் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றதாக கருத்து வெளியிட்டிருந்தமை தென்பகுதியில் சலசலப்பை உருவாக்கியிருந்தது.

இதன் பின்னணியில் இன்றைய தினம் பல மணி நேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தமது பேச்சு குறித்து விளக்கமளித்த கருணா அம்மான் அங்கு இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment