இலங்கையில் 219 சித்திரவதை முகாம்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 21 June 2020

இலங்கையில் 219 சித்திரவதை முகாம்கள்

https://www.photojoiner.net/image/BndLbu5O

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் இயங்கி வருவதாகக் கூறப்படும் 219 சித்திரவதை முகாம்களின் இடங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் ஒன்றை Journalists for Democracy in Sri Lanka (JDS) மற்றும் International Truth and Justice Project (ITJP) ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

சித்திரவதைக்குள்ளானோருக்கான ஆதரவு வழங்குவதற்கான தினமாக சர்வதேச ரீதியில் ஜுன் 26ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டே இவ்வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஜே.வி.பி கிளர்ச்சிக் காலங்களின் போதான பொலிஸ் வதை முகாம்கள் உள்ளடக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, இராணுவம்  - பொலிஸ் - கடற்படையினரும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களையும் இவ்வாறான முகாம்களில் வைத்து துன்புறுத்தி வந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.

யுத்த நிறைவின் பின்னரும் தமிழ் மக்கள் பெருமளவில் சித்திரவதைக்குட்படுத்தப்படுவதாக சர்வதேச ரீதியில் அவ்வப்போது கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment