ஜுலை 14 முதல் தபால் மூல வாக்கெடுப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 June 2020

ஜுலை 14 முதல் தபால் மூல வாக்கெடுப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜுலை 14 மற்றும் 15ம் திகதிகளில் முதற்கட்ட தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்கும் அதேவேளை மாவட்ட செயலகங்கள், பொலிஸ், தேர்தல் திணைக்களம், பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு ஜுலை 16 மற்றும் 17ம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு தினங்களிலும் வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்காக ஜுலை 20 மற்றும் 21ம் திகதிகளில் வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment