பாகிஸ்தானிலிருந்து 129 பேர் நாடு திரும்பினர் - sonakar.com

Post Top Ad

Monday, 15 June 2020

பாகிஸ்தானிலிருந்து 129 பேர் நாடு திரும்பினர்


கொரோனா சூழ்நிலையில் பாகிஸ்தானில் முடங்கியிருந்த இலங்கையர் 129 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

லாகூர் மற்றும் கராச்சி விமான நிலையங்களிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ள அதேவேளை முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில் விமான நிலையம் அருகே ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டியுள்ள நிலையில் இதுவரை 7000 பேரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment