UK: ஹரோ பள்ளிவாசல் ஊடாக நிவாரண பொதிகள் விநியோகம் - sonakar.com

Post Top Ad

Wednesday 13 May 2020

UK: ஹரோ பள்ளிவாசல் ஊடாக நிவாரண பொதிகள் விநியோகம்

https://www.photojoiner.net/image/5qhQJjI0

ஐக்கிய இராச்சியத்தில், கொரோனா சூழ்நிலையின் பின்னணில் பெரும்பாலும் அனைத்து நகரங்களும் நடமாட்டம் இன்றி முடங்கிப் போயுள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக, ஹரோ பகுதியில் இயங்கி வரும் இலங்கைப் பள்ளிவாசல் (முஸ்லிம் கலாச்சார மையம்) ஊடாக பிரதேசத்தில் நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஹரோ கவுன்சிலோடு இணைந்து பிரதேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இடமாக அனுமதி பெற்றிருந்த நிலையில் இன-மத பேதமின்றி பெரும்பாலும் பிரதேச வாசிகள் அனைவருக்கும், குறிப்பாக வயது முதிர்ந்தோர், வெளியில் செல்ல முடியாதோர் அனைவருக்கும் இவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்றைய தினம் விசேடமாக இப்பிரதேசத்தை அண்டி வாழும் இலங்கை குடும்பங்களுக்கான விநியோகம் இடம்பெற்றிருந்தது. பள்ளிவாசல் தலைவர் ரசீன் தலைமையில் இடம்பெறும் இப்பணியில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்தவர் மற்றும் பள்ளி சார்ந்த தொண்டு சேவைகளின் முன்நிற்கும் நல்லுள்ளம் படைத்த இளைஞர்கள் மற்றும் முற்போக்குவாதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேவையுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment