அமெரிக்கா: Minneapolis பொலிஸ் நிலையத்துக்கு மக்கள் தீ வைப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 29 May 2020

அமெரிக்கா: Minneapolis பொலிஸ் நிலையத்துக்கு மக்கள் தீ வைப்பு!


கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொயிட் என்பவரை நிராயுதபாணியான நிலையில் கைது செய்து, நிலத்தில் வீழ்த்தி கழுத்தில் காலை வைத்து மூச்சடைக்கும் வரை அழுத்தி பொலிஸ் அதிகாரியொருவர் கொலை செய்த சம்பவத்தின் பின்னணயில் மினியாபெலிஸில் பதற்ற நிலை தொடர்கிறது.

மூன்று தினங்களாக அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பொலிஸ் நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.

டெரிக் என அறியப்படும் பொலிஸ் அதிகாரியினால் கைது செய்யப்பட்ட வேளையில் நிராயுதபாணியான ஜோர்ஜ் ஒத்துழைத்திருந்ததுடன் தன்னால மூச்செடுக்க முடியாமல் இருப்பதாக பல தடவைகள் சொல்லியும் குறித்த அதிகாரி உயிரிழக்கும் வரை காலால் அழுத்திக் கொண்டிருந்த காணொளி வெளியாகி பதற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment