நேற்று உயிரிழந்த சிப்பாய்க்கு கொரோனா இல்லை - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 May 2020

நேற்று உயிரிழந்த சிப்பாய்க்கு கொரோனா இல்லை


நேற்றைய தினம் தம்புள்ள நகரில் நினைவிழந்து விழுந்து பின் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு கொரோனா பாதிப்பு எதுவுமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இராணுவ சிப்பாய் வீழ்ந்த இடத்திலேயே சுமார் அரை மணி நேரம் கவனிப்பாரற்றுக் கிடந்துள்ளதுடன் கொரோனா அச்சத்தினால் யாரும் அருகில் செல்லவும் அச்சப்பட்டுள்ளனர்.

எனினும், அரை மணி நேரத்தின் பின் சில இளைஞர்களின் உதவியோடு வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலதிக பரிசோதனைகள் மூலம் அவருக்கு கொரோனா தொற்றில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment