கொழும்புக்குள் பேருந்துகள் வரத் தொடர்ந்தும் தடை - sonakar.com

Post Top Ad

Monday, 25 May 2020

கொழும்புக்குள் பேருந்துகள் வரத் தொடர்ந்தும் தடை


நாளை முதல் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொடர்ந்தும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்புக்குள் நுழையாமல் போக்குவரத்து சேவையை நடாத்துவது கடினம் எனவும் அதற்கான அனுமதியையும் தர வேண்டும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இப்பின்னணியில் கண்டியிலிருந்து கொழும்புக்கான சேவைகள் நிட்டம்புவயிலும், தென் பகுதி பஸ் சேவைகள் கொட்டாவயிலும் புத்தளம், அநுராதபுர பகுதியிலிருந்து வரும் சேவைகள் நீர்கொழும்பிலும் நிறுத்தப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment