ராஜிதவின் பிணை மனு வேறு நீதிபதியிடம் மாற்றம் - sonakar.com

Post Top Ad

Wednesday 27 May 2020

ராஜிதவின் பிணை மனு வேறு நீதிபதியிடம் மாற்றம்


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் லங்கா ஜயரத்னவிடம் இருந்து வேறு நீதிபதிக்கு மாற்றும் படி சட்டமா அதிபர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டமா அதிபரின் இந்நடவடிக்கை தமக்கு அதிர்ச்சியளிப்பதாக ராஜித சார்பில் ஆஜரான நீதிபதி மன்றில் தெரிவித்திருந்த நிலையில் குறித்த வழக்கை கூடுதல் மஜிஸ்திரேட் பிரியந்த லியனகேவின் மன்றுக்கு மாற்றப்பட்ட்டுள்ளது.

டிசம்பரில் ராஜிதவின் கைதும் பிணையும் தொடர்பிலான சர்ச்சைகளின் பின்னணியில் வேறு ஒரு நீதிபதியின் விசாரணை கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment