ரமழானின் இறுதிப் பத்தில் ஸ்பீக்கரில் 'பாங்கு' சொல்ல மாத்திரம் அனுமதி - sonakar.com

Post Top Ad

Wednesday 13 May 2020

ரமழானின் இறுதிப் பத்தில் ஸ்பீக்கரில் 'பாங்கு' சொல்ல மாத்திரம் அனுமதி


ரமழானின் இறுதிப் பத்தில் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி ஊடாக பாங்கு சொல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது வக்பு சபை.

பல பள்ளிவாசல்களினால் லவாத்து மற்றும் துஆ செய்வதற்கும் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் வேண்டுகோளினை பரிசீலித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாங்கு மற்றும் கொவிட் 19 தொடர்பான அதிகாரிகளினால் வேண்டப்படும் அறிவித்தல் தவிர வேறு எந்த அறிவிபுக்காகவும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சின் பணிப்புரைகள் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என வக்ப் சபை பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

13.05.2020

சகல பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும்,

வக்ப் சபையின் பணிப்புரைகள்:
2020 ரமழானின் இறுதிப் 10 நாட்கள்

பள்ளியாவயல் ஒலி பெருக்கியினுடாக இமாம்களால் சலவாத்து மற்றும் துஆ செய்வதற்கும் பயான் செய்வதற்கும் அனுமதி வழங்குமாறு நாட்டின் சில பகுதி முஸ்லிம்களிடமிருந்து பல வேண்டுகோல்கள் வக்ப் சபைக்கு கிடைத்துள்ளன.

இவ்விடயம் தொடர்பாக, ஏனையோரின் கருத்துகக்களை அறிந்து கொள்வதற்காக, அகில இலங்கை உலமா சபை, ஷரீஆ கவுன்ஸில் மற்றும் தரீக்கங்களின் உயர் மன்றம் ஆகிய அமைப்புகளின் உலமாக்களோடு நேற்று 12.05.2020 ஆம் திகதி வக்ப் சபை கூட்டமொன்றை நடாத்தியது.

ரமழானின் மீதமுள்ள நாட்களை அமைதியாகவும் சமாதானமாகவும் கழிப்பதற்காக வேண்டி, அதான் தவிர்ந்த வேறெந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்க வேண்டியதில்லை என்றும் அந்த வகையில், ஈதுல் பித்ர் பெருநாள் வரை வீடுகளில் இருந்தவாறு ஆண்மீக மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு முஸ்லிம்கள் வேண்டிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அனைவரும் அபிப்பிராயப்பட்டனர்.

அதற்கேற்ப, அதான் மற்றும் கொவிட் 19 தொடர்பான அதிகாரிகளால் வேண்டப்படுகின்ற பொது அறிவித்தல்கள் அல்லாத வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்தவொரு பள்ளிவாயலும் ஒலி பெருக்கியை பயன்படுத்தக் கூடாது என வக்ப் சபை தீர்மாணித்தது.

மேலும், 15.03.2020 மற்றும் 20.05.2020 ஆகிய தினங்களில் வழங்கப்பட்ட வக்ப் சபை பணிப்புரைகள் மாற்றமின்றி மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.

வக்ப் சபையின் உத்தரவுப் பிரகாரம்.

ஏ.பீ.எம். அஷ்ரப்
வக்ப் சபை பணிப்பாளர் (MMCT) மற்றும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களம்

No comments:

Post a Comment