பொலிஸ்காரரின் மோட்டார் சைக்கிளை விற்று போதைப்பொருள்: மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 5 May 2020

பொலிஸ்காரரின் மோட்டார் சைக்கிளை விற்று போதைப்பொருள்: மூவர் கைது


போதைப் பொருள் பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் அதிகாரியொருவரின் மோட்டார் சைக்கிளைத் திருடி விற்ற மூவர் கைதான சம்பவம் பத்தேகமயில் இடம்பெற்றுள்ளது.

5000 ரூபா பெறுமதியான ஐந்து ஹெரோயின் பக்கற்றுகளுக்குப் பகரமாக பொலிஸ் அதிகாரியின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சந்தைப் பெறுமதியுள்ளதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றையே இவ்வாறு திருடி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் அகப்பட்டுள்ள பின்னணியில் குறித்த நபர்கள் போதைப் பொருளுக்காக அப்பகுதியில் இவ்வாறு பல்வேறு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment