முடக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் திறந்துள்ளதாக அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 15 May 2020

முடக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் திறந்துள்ளதாக அறிவிப்பு


கொரோனா சூழ்நிலையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.

இறுதியாக கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜாஎல  - சுதுவெல்ல பகுதிகளில் தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் அவற்றையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீடு திரும்பியதும் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதற்கான அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment