மது பான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 May 2020

மது பான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி


ஊரடங்கு இல்லாத மாவட்டங்களில் மது பான சாலைகளை திறப்பதற்க மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது அரசாங்கம்.

கொரோனா சூழ்நிலையில் மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்த அதேவேளை கடந்த மாதம் 19ம் திகதி திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் பெருமளவு வரிசைகளில் நின்று மதுக் கொள்வனவு நிகழ்ந்து வந்தது. ஆயினும், சுகாதா சீர் கேடு அச்சம் காரணமாக மீண்டும் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொழும்பு - கம்பஹா சுப்பர் மார்க்கட்டுகளுக்கும் ஊரடங்கு இல்லாத இடங்களுக்கும் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment