கொழும்பு: தேசிய வைத்தியசாலை தாதி ஒருவருக்கும் கொரோனா - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 May 2020

கொழும்பு: தேசிய வைத்தியசாலை தாதி ஒருவருக்கும் கொரோனா


நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய ஐவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரியும் விசேட தர பெண் தாதி ஒருவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, ராஜகிரிய பகுதியில் தொற்றுக்குள்ளான நபர் முச்சக்கர வண்டி சாரதியெனவும், கொலன்னாவ பகுதியில் கண்டறியப்பட்டவர் கூட்டுறவு நிறுவன சாரதியெனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

அத்துடன், கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவருக்கும் எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment