ஊரடங்கில் கைப்பற்றிய மோட்டார் சைக்கிளை தனதாக்கிய பொலிஸ் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 May 2020

demo-image

ஊரடங்கில் கைப்பற்றிய மோட்டார் சைக்கிளை தனதாக்கிய பொலிஸ் கைது!

lSlEGiQ

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் உலாவிய 60,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்களும் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

எனினும், இதில் ஒரு மோட்டார் சைக்கிளை தனதாக்கிக் கொண்டு தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள்.

இந்நிலையில, வாகனத்தைக் காணவில்லையென உரிமையாளர் முறையிட்டிருந்ததன் பின்னணியில் தேடிய போது குறித்த கொன்ஸ்டபிள் அதனை பேராதெனியவில் தனது வீட்டில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதுக்க பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment