
கிந்தொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றின் பௌத்த துறவியை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விகாரையூடாக நடைபாதையொன்று பழக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அதற்கு எதிராக பேசி வந்த குறித்த துறவி இன்று இளைஞர்கள் குழுவொன்றை தடுக்க முற்பட்ட நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள், குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவிப்பதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment