தனியார் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் தயக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 11 May 2020

தனியார் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் தயக்கம்


இலங்கை போக்குவரத்து சபை அலுவலக ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ள போதிலும் தனியார் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் சங்கடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் நிவாரணம் மற்றும் வேறு உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில் சேவைகளை ஆரம்பிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

இதேவேளை, முன்னர் திட்டமிட்டபடி மாவட்டங்களுக்கிடையிலான சேவைகளை இ.போ.ச மேற்கொள்ளவில்லையெனவும் சிறு தூர பயணங்களுக்கே சேவைகளை வழங்கி வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment