5000 ரூபாவை பெற்றுக்கொள்ள எல்லோரும் முயற்சிக்க வேண்டும்: பாரிஸ் - sonakar.com

Post Top Ad

Friday, 8 May 2020

5000 ரூபாவை பெற்றுக்கொள்ள எல்லோரும் முயற்சிக்க வேண்டும்: பாரிஸ்


அரசாங்கம் வழங்கும் இடர்கால 5000 ரூபாய் கொடுப்பனவை  நலிவடைந்துள்ள  சமூகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் பாகுபாடின்றி பெற்றுக் கொள்ள வேண்டும். கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள், அன்றாடம்  தொழில்களின்றி பாதிக்கப்பட்ட பல்லின சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொரோனா தொற்றுக்கான  5000  ரூபாய் இடர்கால கொடுப்பனவை ஒரு வீட்டில் உள்ள குடும்பத்திற்கு மட்டுமல்ல  உப குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. இப்பணம் பெற்றுக் கொள்ளாதவர்கள்.  தமது பிரதேச செயலாளிடம் முறைப்பாடுகளைச் செய்து பெற்றுக் கொள்ள முடியும். கண்டி மாவட்டத்தில் இப்பணத்த இதுவரை பெற்றுக் கொள்ளாத மக்களும் உள்ளனர். எனவே தமது பிரதேச செயலாளரிடம் சென்று மேல் முறைப்பாடுகளைச் செய்து அப்பணத்தைப் பெற்றுக் கொள்ள  முயற்சிகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கம்  கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு வேலைத் திட்டங்களை மேற் கொண்டு வருவதுடன் ஊரடங்கு வேளையில் அன்றாட தொழிலை இழந்த கஷ்டத்தில் வாடும் மக்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் இடர்கால கொடுப்பனவையும் வழங்கி வருகின்றது. இந்தக் கொடுப்பனவை கணிசமாளனவு மக்கள் பெற்றுக் கொண்டாலும் இன்னும்  எத்தனையோ பேர் இப்பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்தக் கொடுப்பனவுகளை மக்களுக்கு வழங்குவதற்காக  கிராம உத்தியோகஸ்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் விவசாய ஆய்வு மற்றும் உற்பத்தி உத்தியோகஸ்தர்கள் நேரம் காலம் பாராமல் தங்களுடைய கடமைகளை சிரமின்றி மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். இந்தச் சநதர்ப்பத்தில் நெருக்கடியான காலட்டத்தில் கடமையாற்றி வரும் இந்த உத்தியோகஸ்தர்களுக்கு எ;ன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்று ஒரு ஆபத்தானது. அதைப்  போன்றுதான் வறுமையும்;. எனவே மக்களை வறுமையில் இருந்து பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நிவாரண உதவிகளை  வழங்கி அதில் இருந்து பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்து நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த இடர்காலக் கொடுப்பனவு தொடர்பில் இரண்டாம் கட்டம் வழங்குவதற்கான ஆயத்தங்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று தொண்டு நிறுவனங்களும்   கூலி வேலை செய்யும் மற்றும் நலிவடைந்துள்ள மக்களுக்கு அன்றாட பட்டினியை நிறைவு செய்யும் வகையில் தங்களுடைய நிவாரண உதவிகளையும்  செய்து வருகின்றனர்.

மக்கள் அரசாங்கம் வழங்கும் இடர்கால 5000 ரூபாய் கொடுப்பனவை குறிப்பாக கண்டி மாவட்டத்தில்  நலிவடைந்த சகல சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பாகுபாடின்றி பெற்றுக் கொள்ள வேண்டும். கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள், அன்றாடம் கூலித் தொழில்களின்றி பாதிக்கப்பட்ட பல்லின சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.

இப்பிரதேசத்தில வாழும் சிங்கள , முஸ்லிம் தமிழ், கிறிஸ்தவ சமய மக்கள் அனைவரும் இந்தக் காலச் சூழலை உணர்ந்து சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.  அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்காக  வெளியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் சமூக இடைவெளியையும் சுகாதாரப் பழக்க வழக்கங்களையும் சுய ஒழுக்கத்தையும் பேணி நடக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி

No comments:

Post a comment