தேர்தலுக்கு எதிரான வழக்குகள்: 18 - 19ம் திகதிகளில் பரிசீலனை - sonakar.com

Post Top Ad

Monday, 11 May 2020

தேர்தலுக்கு எதிரான வழக்குகள்: 18 - 19ம் திகதிகளில் பரிசீலனை


ஜுன் 20ம் திகதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழு மனுக்களை எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது உச்ச நீதிமன்றம்.

இவ்வழக்கில் தேர்தல் ஆணைக்குழு சார்பாக சட்டமா அதிபர் ஆஜராக முடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர் சார்பாக இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கொரோனா சடலங்கள் எரிப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்கும் 18,19 அல்லது 20ம் திகதி மனுதாரர்களால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment