ஆறு வாரங்களில் அரசுக்கு 120 பில்லியன் வருமான வீழ்ச்சி - sonakar.com

Post Top Ad

Sunday 3 May 2020

ஆறு வாரங்களில் அரசுக்கு 120 பில்லியன் வருமான வீழ்ச்சி


கடந்த ஆறு வாரங்களில் அரசுக்கு 120 பில்லியன் ரூபா வருவாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி, சுங்கத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு, போக்குவரத்து மற்றும் மதுவரித் திணைக்களம் ஊடான வருமானவே இவ்வாறு முடங்கிப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை வழமைக்குத் திரும்பியதும் கணிசமான அளவு வருவாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும், தற்சமயம் திறைசேரியிலிருந்தே ஊழியர் ஊதியங்களும் வழங்கப்படும் சூழ்நிலை நிலவுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment