பேலியகொட மீன் வர்த்தகர்களை பரிசோதிக்க நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 April 2020

பேலியகொட மீன் வர்த்தகர்களை பரிசோதிக்க நடவடிக்கை


பேலியகொட மீன் சந்தையில் கொள்வனவு செய்து ஏனைய இடங்களில் விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டிருந்ததன் பின்னணியில் அச்சந்தையில் மீன் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இன்று பரிசோதனை நடாத்தப்படவுள்ளது.இறுதியாக பிலியந்தலயில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கண்டறியப்பட்ட நபரே இவ்வாறு இங்கு சென்று மீன் கொள்வனவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, பேலியகொட சந்தையில் தற்போது மொத்த விற்பனை மாத்திரமே முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment