தமிழ்நாடு: கொரோனாவால் வபாத்தான சகோதரரின் ஜனாஸா நல்லடக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday, 9 April 2020

தமிழ்நாடு: கொரோனாவால் வபாத்தான சகோதரரின் ஜனாஸா நல்லடக்கம்தமிழ்நாடு, வேலூர் மாநகர் சைதாப்பேட்டை பகுதியைச் சார்ந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வபாத்தான சகோதரர் சாதிக் பாஷா (45) வின் ஜனாஸா நேற்றைய தினம் (8) இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வபாத்தான குறித்த சகோதரரின் உடலத்தை மாவட்ட நிர்வாக மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஒத்துழைப்புடன், காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து நல்லடக்கம் செய்ததாக த.மு.மு.க சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

No comments:

Post a comment