தேர்தல் அறிவித்த பின் நாடாளுமன்றைக் கூட்ட அவசியமில்லை: ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Thursday 30 April 2020

தேர்தல் அறிவித்த பின் நாடாளுமன்றைக் கூட்ட அவசியமில்லை: ஜனாதிபதி!


ஜுன் 20ம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாடாளுமன்றை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியமில்லையென எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலை மற்றும் பொருளாதாரம், பட்ஜட் போன்ற விவகாரங்களைக் கருத்திற் கொண்டு நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் எழுத்து மூலம் விடுத்த கோரிக்கைக்கே ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், நாளைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலரிமாளிகையில் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment