அட்டுலுகம தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்தது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 April 2020

அட்டுலுகம தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்தது!

.net/image/

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக மார்ச் மாதம் 27ம் திகதி முதல் அட்டுலுகமவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த காலப்பகுதியில் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது சிரமப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பிரதேசத்தின் மீதான கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்கள் சார்ந்த பிரதேசங்களை உடனடியாக மூடி, தகுந்த நடவடிக்கை எடுத்ததன் ஊடாக தொற்றின் வீச்சு குறைக்கப்பட்டதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment