
கொழும்பு, மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணித் தாயொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டிருந்து. குறித்த தாயின் குழந்தை உயிரிழந்திருந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குழந்தையின் ஜனாஸாவைக் கையளிப்பதில் இழுபறி நிலவியிருந்த நிலையில் அதற்கான தொடர் முயற்சியின் பயனாக இன்று ஜனாஸா கையளிக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை மட்டத்தில் நிலவிய கருத்து முரண்பாட்டின் காரணமாகவே இவ்விழுபறி நிலவியிருந்தது. இந்நிலையில் இன்று ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்டிருந்த முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி சோனகர்.கொம்முக்கு வழங்கிய விளக்கத்தின் ஒலிப்பதிவை இங்கு செவிமடுக்கலாம்:
No comments:
Post a Comment