முஸ்லிம்களிடம் 'வருத்தம்' தெரிவிக்கும் உபுல் ரோஹன! - sonakar.com

Post Top Ad

Monday, 13 April 2020

முஸ்லிம்களிடம் 'வருத்தம்' தெரிவிக்கும் உபுல் ரோஹன!

https://www.photojoiner.net/image/AbRiaeUb

அத தெரண தொலைக்காட்சியின் இனவாத செயற்பாடுகளுக்குத் துணை போய், நாட்டில் புத்தாண்டைக் கொண்டாட முடியாமல் போனமைக்கு மூன்று முஸ்லிம் நபர்களே காரணம் எனும் தொனியில் தான் தெரிவித்த கருத்து முஸ்லிம்களைப் பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரவிப்பதாக சொல்கிறார் சுகாதார ஆய்வாளர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன.


முஸ்லிம்களை இலக்கு வைத்து கருத்துரைக்க வேண்டும் எனும் நோக்கில் தான் அவ்வாறு எதையும் தெரிவிக்கவில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.

எனினும், குறித்த நிகழ்ச்சியில் முஸ்லிம் பிரதேசங்கள் சுட்டிக்காட்டப்பட்டு, குறித்த மூவரின் நடவடிக்கைகளினாலேயே புத்தாண்டு கொண்டாட முடியாமல் போயுள்ளதாக அததெரண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உபுல் ரோஹன வெளியிட்டுள்ள விளக்கம்:
2020.04.10 දින පැවති දෙරණ Big Focus රුපවාහිනී වැඩසටහනේදී COVID 19 වසංගත තත්වය පැතිර යාම සම්බන්ධව කරන ලද ප්‍රකාශය මුස්ලිම් ජාතිකයින් අපහසුතාවයට පත් කිරීමේ අරමුණින් නොකළ බවත් ඒ සම්බන්ධව මුස්ලිම් සහෝදරයින් යම් අපහසුතාවයකට පත් වුවෙනම් කණගාටු වන බවත් සිහිපත් කරවමි.උපුල් රෝහණසභාපතිශ්‍රී ලංකා මහජන සෞඛ්‍ය පරීක්ෂක වරුන්ගේ සංගමය

No comments:

Post a comment