'தோப்புக்கரணம்' பொலிசாரை மீண்டும் இணைத்துக்கொள்ள முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 April 2020

'தோப்புக்கரணம்' பொலிசாரை மீண்டும் இணைத்துக்கொள்ள முஸ்தீபு


கொழும்பு, மருதானை பகுதியில் ஊரடங்கு நேரத்தில் உலவிய சிலரை தோப்புக்கரணம் போட வைத்ததன் பின்னணியில் இடைநிறுத்தப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி ஆராயப்பட்டு வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிசாரே இவ்வாறு உடனடி தண்டனை வழங்கியிருந்த நிலையில் அவர்களை இடைநிறுத்துவதாகவும் ஒழுக்காற்று விசாரணை இடம்பெறவுள்ளதாகவும்  நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த நபர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment