தம்பதிவ சென்று வந்த பெண் வாழ்ந்த பகுதியின் மக்கள் முகாமுக்கு - sonakar.com

Post Top Ad

Sunday, 19 April 2020

தம்பதிவ சென்று வந்த பெண் வாழ்ந்த பகுதியின் மக்கள் முகாமுக்கு


கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் மார்ச் மாதம் இந்தியா, தம்பதிவ சென்று திரும்பியிருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியிலிருந்து மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்றிருப்பதை கண்டறிந்த சுகாதார ஊழியர்கள் குறித்த தோட்டப்பகுதியைச் சேர்ந்த அனைவரையும்  இன்று பரிசோதனைக்குட்படுத்தி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

19ம் திகதி கொரோனா பாதிப்புக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டதில் ஆகக்குறைந்தது 12 பேர், ரொட்டிக் கடைத் தோட்டம் என அறியப்படும் குறித்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை அங்கு வாழ்ந்த அனைத்து குடும்பங்களும் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment