இனவாத பிரச்சாரம்: பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் அமைப்புகள் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Sunday, 12 April 2020

இனவாத பிரச்சாரம்: பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் அமைப்புகள் முறைப்பாடுகொரோனா சூழ்நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத பிரச்சாரம் தொடர்பில் உடனடியக விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஒப்பத்துடன் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.அண்மையில் அத தெரன தொலைக்காட்சியில் தோன்றி தவறான கருத்துக்களை விதைத்த சுகாதார அதிகாரி தொடர்பான காணொளிப் பதிவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் நாட்டில் அமுலில் இருக்கும் , பயங்கரவாத தடுப்பு மற்றும் தண்டனைச் சட்டங்களின் பின் தகுந்த நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஷுரா கவுன்சில், வை.எம்.எம்.ஏ, முஸ்லிம் மீடியா போரம் உட்பட பத்து அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் முறைப்பாட்டின் ஒப்பக்காரர்களாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment