99 வயதில் 430 கோடி ரூபாய் நிதி சேகரித்த முன்னாள் இராணுவ வீரர்! - sonakar.com

Post Top Ad

Friday 17 April 2020

99 வயதில் 430 கோடி ரூபாய் நிதி சேகரித்த முன்னாள் இராணுவ வீரர்!


பிரித்தானியாவில் வாழும் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரரான கெப்டன் டொம் மூர், தனது 99 வது வயதில் தேசிய சுகாதார சேவைக்காக (தற்சமயம்) சுமார் 430 கோடி ரூபாய் இலங்கை நாணய மதிப்பில் நிதி சேகரித்துள்ளார்.



தனது 100வது வயதுக்கு முன்பதாக ஆயிரம் பவுண்கள் நிதி சேகரித்து தேசிய சுகாதார சேவைக்கு (NHS) அன்பளிப்பாக வழங்கும் நோக்கத்தில் அவர் ஆரம்பித்திருந்த முன்னெடுப்புக்கு சோனகர்.கொம்மில் இச்செய்தி எழுதப்படும் இத்தருணத்தில் 889,944 பேர் நிதியுதவி செய்திருப்பதோடு இதனூடாக 18 மில்லியன் பவுண்கள் (இதுவரை) சேகரிக்கப்பட்டுள்ளது.

தனக்குக் கிடைக்கப்பெற்ற இவ்வாதரவை வாழ்நாள் கௌரவமாகக் கருதும் முன்னாள் இராணுவ வீரர், சேர்க்கப்பட்ட நிதி முழுமையாக தேசிய சுகாதார சேவைக்கே செல்லும் என தெரிவித்து வருவதுடன் தனது 100 வது வயதைக் கொண்டாடுவதற்கு முன்பாக தற்சமயம் அவரது வீட்டுத் தோட்டப் பகுதியில் 100 தடவைகள் நடைச்சுற்றிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெப்டன் மூர் எதிர்வரும் 30ம் திகதி 100வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார்!



No comments:

Post a Comment