மியன்மார் வெளவால்களில் 6 புதிய வகை 'கோரானோ' கண்டுபிடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

மியன்மார் வெளவால்களில் 6 புதிய வகை 'கோரானோ' கண்டுபிடிப்பு


மியன்மாரில் காணப்படும் மூன்று வகையான வெளவால்களில் தற்போது உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொவிட - 19 இணைக்கப்பட்டிருக்கும் அதே SARS-CoV2 வகையைச் சேர்ந்ததாயினும் இவை ஏனைய மனிதர்களுக்கோ மிருகங்களுக்கோ தொற்றக்கூடியனவா என்பது பற்றி மேலதி பரிசோதனைகள் அவசியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மியன்மாரில் உள்ள மூன்று குகைப்பகுதிகளிலிருந்து பெறப்பட்ட வெளவால் இனங்களிலேயே இவ்வைரஸ் காணப்படுவதாகவும் அவை பற்றி முன் கூட்டியே பரிசோதனைகளை செய்வதன் ஊடாக இதனூடான தொற்று அபாயத்தைத் தவிர்க்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 பாதிப்பினால், சோனகர்.கொம்மில் இச்செய்தி பிரசுரிக்கப்படும் நேரத்தில் உலகளாவிய ரீதியில் 1.9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 126,681 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 486,622 பேர் சிகிச்சைகள் ஊடாக குணமடைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இத்தருணத்தில் 233 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 61 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment