தொடர்ந்தும் ஒளிந்திருக்கும் 49 பேரைத் தேடி நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 9 April 2020

தொடர்ந்தும் ஒளிந்திருக்கும் 49 பேரைத் தேடி நடவடிக்கை


வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கக் கூடியதாக சந்தேகிக்கப்படும் 49 பேர் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பாகங்களில் ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது.இப்பின்னணியில் குறித்த நபர்களைத் தேடி உடனடியாகக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மறைவாக இருப்பவர்கள் தம்மை அடையாளப்படுத்தி, அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதியுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, கட்டார், ஜோர்டான், சோமாலியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து = மார்ச் மாதம் முற்பகுதியில் நாட்டுக்குள் நுழைந்த நபர்களே இவ்வாறு இன்னும் தேடப்படுவதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment