ஜா-எல: தனிமைப்படுத்தலைத் தவிர்த்து வந்த 28 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 9 April 2020

ஜா-எல: தனிமைப்படுத்தலைத் தவிர்த்து வந்த 28 பேர் கைது!


ஜா-எல பகுதியில் தனிமைப்படுத்தலில் ஈடுபட உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் அதனைத் தவிர்த்து வந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியதாக அடையாளங் காணப்பட்ட வாடகை வாகன சாரதியொருவருடன் தொடர்பு வைத்திருந்ததன் பின்னணியிலேயே குறித்த 28 பேருக்கும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், அதைத் தவிர்த்து பிரதேசத்தில் உலவி வந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment