20ம் திகதி முதல் பல இடங்களில் ஊரடங்கு தளர்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

20ம் திகதி முதல் பல இடங்களில் ஊரடங்கு தளர்வு


எதிர்வரும் 20ம் திகதி முதல் கொழும்பு, கேகாலை, புத்தளம், கண்டி, களுத்துறை, கம்பஹா மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையான காலப்பகுதியிலேயே ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, கொழும்பில் பம்பலபிட்டி, கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், கிரான்ட்பாஸ், மருதானை, கல்கிஸ்ஸ, தெஹிவளை, வெல்லம்பிட்டி போன்ற பிரதேசங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் 22ம் திகதி முதல் ஏனைய இடங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலைகள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள், ரியுசன் வகுப்புகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment