ஏப்ரல் 17 வரை கட்டுப்பாடுகள் தொடரும்: Dr அனில் - sonakar.com

Post Top Ad

Sunday, 5 April 2020

ஏப்ரல் 17 வரை கட்டுப்பாடுகள் தொடரும்: Dr அனில்


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஏப்ரல் 17ம் திகதி வரை தொடரும் சூழ்நிலையே உள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.முன்னதாக ஏப்ரல் 6ம் திகதி வரை கண்காணிப்பைத் தொடர முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இப்பின்னணியில் ஏப்ரல் 17 வரை கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment