மே 15 வழமை நிலை இல்லாவிட்டால் தேர்தல் தள்ளிப் போகும்: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 April 2020

மே 15 வழமை நிலை இல்லாவிட்டால் தேர்தல் தள்ளிப் போகும்: தேசப்பிரிய


மே 15ம் திகதியளவில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமை நிலைக்குத் திரும்பாவிட்டால் ஜுன் 20ம் திகதி தேர்தலை நடாத்த முடியாது என தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.ஆகக்குறைநதது 35 தினங்களாவது நாடு இயல்பு நிலையில் இயங்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் தேர்தலை நடாத்த முடியாது எனவும் விளக்கியுள்ள அவர், தற்சமயம் ஜுன் 20 தேர்தல் நடாத்துவதற்கான ஆயத்தம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார்.

எனினும், மே 15 அளவில் வழமை நிலை இல்லாவிட்டால், விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் தேர்தல் பின் போடப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment