கொரோனா அபாயம் தீவிரமாகும்: UK பிரதமர் எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 29 March 2020

கொரோனா அபாயம் தீவிரமாகும்: UK பிரதமர் எச்சரிக்கை


ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா சூழ்நிலை தணிவதற்கு முன்பாக பெரிய அளவில் தீவிரமடையக் கூடும் என எச்சரித்துள்ளார் கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ள ஐக்கிய இராச்சிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்.


இரு இலங்கையர் உட்பட 1019 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ள போதிலும் ஏனைய நாடுகள் போன்று கடுமையான விதிமுறைகள் ஐக்கிய இராச்சியத்தில் இன்னும் அமுலுக்கு வரவில்லை. இங்கிலாந்தின் பிரதான விமான நிலையங்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்ற அதேவேளை பொது மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை மாத்திரம் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் ஏற்படக் கூடிய உயிரிழப்பினை இருபதாயிரத்துக்குள் கட்டுப்படுத்தினால் அது வெற்றியென தேசிய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment