தீவிரமடையும் டில்லி மர்கஸ் விவகாரம்; பலருக்கு 'கொரோனா' - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 March 2020

தீவிரமடையும் டில்லி மர்கஸ் விவகாரம்; பலருக்கு 'கொரோனா'இந்திய தலைநகர் டில்லியில் அமைந்துள்ள மர்கஸ் நிசாம்தீனில் தங்கியிருந்ததாகக் கருதப்படும் 50க்கும் 100க்கும் இடைப்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில், தடையை மீறி குறித்த பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஒன்று கூடல் இடம்பெற்றதாக தற்போது குற்றஞ்சாட்டப்பட்டு வருவதுடன் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இம்மாத முற்பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த ஒன்றுகூடல் இடம்பெறவில்லையெனவும் அரசாங்கத்தின் தடைகளையடுத்து வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் நிர்ப்பந்தத்தினால் அங்கு தங்கியிருக்க நேர்ந்ததாகவும் பள்ளிவாசல் தரப்பு தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிறு முதல், காவற்துறை தலையீட்டில் அங்கிருந்து 1900 பேரளவில் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment