கொரோனாவால் இறந்த தர்மசிறியின் உடலம் எரிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 29 March 2020

கொரோனாவால் இறந்த தர்மசிறியின் உடலம் எரிப்பு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்த தர்மசிறி ஜனானந்த எனும் 60 வயது நபரின் உடலம் சர்வதேச விதி முறைப்படிகளின் அடிப்படையில் பலத்த பாதுகாப்புடன் கொட்டிகாவத்தையில் எரிக்கப்பட்டுள்ளது.மாரவிலயைச் சேர்ந்த குறித்த நபர் ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

குறித்த நபர் ஏலவே நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment