கொழும்புக்கான 'குவைத்' விமான சேவை இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Saturday, 7 March 2020

கொழும்புக்கான 'குவைத்' விமான சேவை இடை நிறுத்தம்


குவைத் - கொழும்பு இடையிலான விமான சேவையை தற்காலிகமாக ஒரு வார காலத்திற்கு இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குவைத்.கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தின் பின்னணியில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பின்னணியில் எதிர்வரும் 13ம் திகதி வரை சர்வதேச ரீதியில் குவைத் விமான சேவையூடாக கொழும்புக்கான பயண ஏற்பாடுகளைச் செய்துள்ள பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தடையை நீடிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment